இந்தியா

திருப்பதியில் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தரிசனத்திற்கு வருகின்றனர். காத்திருப்பு அறைகள் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. காத்திருப்பு அறைகளை தாண்டி ரிங் ரோடு, ஆக்டோபஸ் அலுவலகம் வரை பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

சிறப்பு தரிசனம்

ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். திருப்பதியில் கடும் வெயில் கொளுத்துவதால் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி, பால் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆங்காங்கே நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

விஷ்ணு நிவாசம்

திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், விஷ்ணு நிவாசம், பூதேவி காம்ப்ரஸ் ஆகிய இடங்களில் சர்வ தரிசன டோக்கன் பெறுவதற்காக நேற்று முதல் பக்தர்கள் காத்திருந்தனர். வெயிலில் தாக்கத்திலும் பக்தர்கள் தங்களது உடைமைகளை சுமந்து கொண்டு காத்திருந்ததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். எனவே ஒரு நாளைக்கு வழங்கப்படும் 10 ஆயிரம் தரிசன டோக்கன்களை 20 முதல் 25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பக்தர்கள்

திருப்பதியில் நேற்று 78,026 பேர் தரிசனம் செய்தனர்.31, 160 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.5.12 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.4.21 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது.

SCROLL FOR NEXT