பிரபல மல்யுத்த வீரர் பா.ஜனதாவில் சேர்ந்தார் 
இந்தியா

பிரபல மல்யுத்த வீரர் பா.ஜனதாவில் சேர்ந்தார்

நாட்டின் வளர்ச்சிக்கு மோடி ஆற்றும் பணிகளால் கவரப்பட்டு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளேன். வளர்ச்சிக்கு நானும் பங்காற்ற விரும்புகிறேன் என்று தலீப் சிங் ராணா கூறினார்.

புதுடெல்லி :

உலக மல்யுத்த கேளிக்கை நிகழ்ச்சியால் பிரபலம் ஆனவர், ‘தி கிரேட் காளி’ எனப்படும் தலிப்சிங் ராணா. அவர் பஞ்சாப் மாநிலத்தில் போலீ்ஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தலிப்சிங் ராணா, நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தார். அக்கட்சி அலுவலகத்தில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், பா.ஜனதா பொதுச்செயலாளர் அருண்சிங் ஆகியோர் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.

‘‘காளி எங்கு வசித்தாலும் அவரது இதயம் இந்தியாவில்தான் இருக்கும்’’ என்று ஜிதேந்திர சிங் புகழாரம் சூட்டினார்.

தலிப்சிங் ராணா பேசுகையில், ‘‘நமக்கு மோடி என்ற சிறந்த பிரதமர் கிடைத்திருக்கிறார். நாட்டின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றும் பணிகளால் கவரப்பட்டு பா.ஜனதாவில் சேர்ந்துள்ளேன். வளர்ச்சிக்கு நானும் பங்காற்ற விரும்புகிறேன்’’ என்று கூறினார்.