கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் பாஜகவில் இணைந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் பாஜகவில் இணைந்துள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, பாஜகவின் புதிதாக உருவாக்கப்பட்ட 'தேசிய ஓபிசி அணி'யின் செயற்குழுவிற்கு அவர் 'சிறப்பு அழைப்பாளராக' நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தார். முன்னதாக, யுவேந்திர சாஹல், ஓபிசி முன்னணி தலைவர் அமர்பால் மௌரியாவை சந்தித்தார்.
அவருடன் ஒடிசாவைச் சேர்ந்த பேராசிரியர் அத்வைத் சரண் கட்நாயக் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சீமா சம்ரித்தி குஷ்வாஹா ஆகிய மேலும் இரண்டு சிறப்பு அழைப்பாளர்களின் பெயர்களும் இந்த அணி செயற்குழு சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
கட்சிக்குள் தனக்குப் பொறுப்பு வழங்கியதற்காக பாஜக மேலிடத்திற்கு யுவேந்திர சாஹல் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாஹல், "பாஜக குடும்பத்திற்குள் எனக்கு ஓர் இடத்தையும் மரியாதையையும் அளித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் மற்றும் ஓபிசி மோர்ச்சா தேசியத் தலைவர் அமர்பால் மௌரியா ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.