ஆர். மாதவன், ரோகித் சர்மா
இந்தியா

பத்ம ஸ்ரீ விருதை பெற்ற நடிகர் மாதவன், கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா

இந்திய ஒருநாள் கிரிக்கெட்டின் தொடக்க வீரரான ரோகித் சர்மா, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் இருந்து பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் விருதுகளை அறிவிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறது.

திரைப்படத் துறையில் சாதித்ததற்கான மலையாள சினிமா சூப்பர் ஸ்டார் மம்மூட்டிக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பத்ம பூஷண் விருது வழங்கினார். அதேபோல் பாடகி அல்கா யாக்னிக் பத்ம பூஷண் விருதை பெற்றார்.

தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்த ஆர். மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசு தலைவர். அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மாவும் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக் கொண்டார்.

SCROLL FOR NEXT