கேரள சட்டசபைத் தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் கண்ணூரில் பேரணி நடத்தப்பட்டது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியை தோற்கடிப்பதற்காக பா.ஜ.க.வும் சி.பி.எம். கட்சியும் மறைமுகமாக இணைந்து செயல்படுகின்றன என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றிபெற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விரும்புவதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையே ஒரு “மறைமுகப் புரிதல்” இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம் பதில் அளிக்கையில், ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டை கேரளத்தில் யாரும் நம்ப மாட்டார்கள். காங்கிரஸ்தான் பா.ஜ.க.வுடன் நின்றது என தெரிவித்தார்.