களிமண் சிலைகள் 
இந்தியா

1.33 லட்சம் களிமண் சிலைகள் இலவசமாக விநியோகம்- மாநகராட்சி புதிய முயற்சி

களிமண் விநாயகர் சிலைகளை விநியோகிப்பதற்காக, நகரம் முழுவதும் 34 பகுதிகளில் அதிகாரிகள் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஐதராபாத் மாநகரப் பகுதியில் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் ஐதராபாத் மாநகரப் பகுதியில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) மற்றும் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளுக்குப் பதிலாக, களிமண் சிலைகளை நிறுவ வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இலவசமாக விநியோகம்

இதன் ஒரு பகுதியாக, சுற்றுச்சூழல் நலன் கருதி இன்று முதல் மாநகரவாசிகளுக்கு 1.33 லட்சம் களிமண் விநாயகர் சிலைகள் இலவசமாக விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களிமண் விநாயகர் சிலைகளை விநியோகிப்பதற்காக, நகரம் முழுவதும் 34 பகுதிகளில் அதிகாரிகள் சிறப்பு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

1.33 லட்சம் களிமண் சிலைகளில், 53,000 சிலைகள் ஒரு அடி உயரமும், 80 ஆயிரம் சிலைகள் 8 அங்குல உயரமும் கொண்டவை. களிமண் சிலைகள் இலவசமாக விநியோகிக்கப்படுவதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT