கொரோனா பரிசோதனை 
இந்தியா

மீண்டும் உயர்ந்த தினசரி பாதிப்பு- இந்தியாவில் 1.72 லட்சம் பேருக்கு கொரோனா

கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1008 பேர் உயிரிழந்துள்ளனர்.

புது டெல்லி:

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1,72,433 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தொற்று எண்ணிக்கை 1,61,386-ஆக இருந்த நிலையில் நேற்று 6.8 சதவீதம் உயர்ந்துள்ளது.  

இந்தியாவில் கொரோனா தொற்று பரவும் விகிதம் 10.99 சதவீதமாக உள்ளது.

இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 4,16,30,885-ல் இருந்து 4,18,03,318-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து 2,59,107 பேர் வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் இந்தியாவில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,95,11,307-ல் இருந்து 3,97,70,414-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் 1008 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் இதன் எண்ணிக்கை 1733 ஆக இருந்த நிலையில் குறைந்துள்ளது. இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,97,975-ல் இருந்து 4,98,983-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,33,921-ஆக குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்... தவான், ருத்ராஜ், ஷ்ரேயஸ் உள்பட இந்திய அணியில் 7 பேருக்கு கொரோனா