தொகுதி மறுவரையறை விவாதத்தில் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய ராகுல் காந்தி,"ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்கிறது" என்றார்.
மக்களவையில் மேலும் அவர் பேசியதாவது:-
ஜம்மு காஷ்மீரை போல அனைத்து மாநிலங்களையும் மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மசோதாவின் மூலம் இந்திய அரசியல் வரைப்படத்தையே மாற்ற முயற்சி நடக்கிறது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கான மசோதாவே இல்லை.
2023ம் ஆண்டு மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கொண்டுவந்த பிறகு தற்போது புதிய மசோதா எதற்கு?
2023ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தான் பெண்களுக்கான உண்மையான மசோதா.
மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுப்பதைத் தவிர்க்க நினைக்கிறது.
மக்களவை பிரதிநிதித்துவத்தில் சாதிவாரி கணக்கெடுப்பின் பலன்கள் இடம்பெறாமல் தடுக்க முயற்சி.
தென்னிந்திய மக்கள், வடகிழக்கு இந்திய மக்களின் அதிகாரத்தை பறிக்க நாங்கள் விடமாட்டோம்.
மகளிர் மசோதாவின் பின் ஒளிந்துகொண்டு மத்திய அரசு தனது தேர்தல் நோக்கங்களை நிறைவேற்ற முயற்சி.
இந்திய பெண்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் கேவலமான வேலையை மத்திய பாஜக அரசு செய்கிறது. உண்மையில் மத்திய அரசின் செயல் வெட்கக் கேடானது.
மேஜிக் செய்பவர்கள் போல ஒன்றின் மீது மற்றொன்றை மறைத்து கண்கட்டி வித்தை செய்வதா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனத்தால் கொந்தளித்த பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பி வருகின்றனர்.