காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்ட அரசியல் கட்சிகளால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது என்றும் அவர் கூறினார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் மற்றும் காங்கிரஸின் தொடர் தேர்தல் தோல்விகளைக் குறிவைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழல்கள் குறித்தும் அவர் பதிலடி வழங்கியுள்ளார்.
டெல்லியில் சுமார் 8,941 கோடி ரூபாய் மதிப்பிலான யமுனை நதி தூய்மைப் பணிகளைத் தொடங்கிவைத்து உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியைச் கடுமையாக விமர்சித்தார். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை எதிர்த்துப் போராடி வரும் வேளையில், ராகுல் காந்தி வியட்நாம் நாட்டிற்கு நான்கு நாள் தனிப்பட்ட பயணமாகச் சென்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
ராகுல் காந்தியை நேரடியாகக் குறிப்பிட்டு, நீங்கள் தற்போது வெளிநாட்டில் இருக்கிறீர்கள், உங்களுடைய காரணங்களை எங்குச் செல்கிறீர்கள் என்பதை விளக்கத் தேவையில்லை, அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை என்று குறிப்பிட்ட அமித்ஷா, எனினும் டெல்லிக்குத் திரும்பிய பிறகு தனது கருத்தைக் கவனமாகக் கேட்குமாறு கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் கடந்த பல தசாப்த கால தேர்தல் தோல்விகளையும், அதன் தற்போதைய அரசியல் நிலைப்பாடுகளையும் கடுமையாக விமர்சித்த அமித்ஷா, அக்கட்சி அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு பல முக்கிய மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதாகவும், இரட்டை நிலைப்பாடுகளைக் கொண்ட அரசியல் கட்சிகளால் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது என்றும் அவர் கூறினார்.
தேர்தல் களத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் காங்கிரஸ் தலைவர்கள் வெளிநாட்டுப் பயணங்களில் ஆர்வம் காட்டுவதாகவும், அவர்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.