இந்தியா

மாநிலங்களவை வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்.. கார்கே இன்று வேட்புமனு தாக்கல்

தமிழகத்தில் பிரவீன் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு.

10 மாநிலங்களில் 24 மாநிலங்களவை இடங்களுக்கு இடங்களுக்கு ஜூன் 18 அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆந்திரா, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா 4 இடங்களும்; மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் தலா 3 இடங்களும்; ஜார்க்கண்டில் 2 இடங்களும்; மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் தலா 1 இடமும் காலியாகின்றன.

தேர்தலுக்கான 7 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை காங்கிரஸ் அறிவித்தது. தமிழகத்தில் கூட்டணியில் உள்ள தவெக, காங்கிரசுக்கு மாநிலங்கவளை சீட்டை ஒதுக்கிய நிலையில் பிரவீன் சக்கரவத்தியை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.

அவருடன் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா, கமிட்டி செயலாளர் மன்சூர் அலி கான் ஆகியோரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி நடராஜன் போட்டியிடுகிறார்.

ராஜஸ்தான் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நீரஜ் டாங்கி மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட்டில் கமிட்டி செயலாளர் பிரணவ் ஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 8 கடைசி நாளாகும். இதில் மல்லிகார்ஜுன கார்கே இன்று பெங்களூருவில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.