இந்தியா

கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு: காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் லீக் என விமர்சித்த பாஜக

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெருக்கடி கொடுத்ததால் வி.டி. சதீசன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாஜக தெரிவித்துள்ளது.

கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. கடந்த 4-ந்தேதி முடிவு அறிவிக்கப்பட்டது. 140 தொகுதிகளை கொண்ட கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட காங்கிஸ் தலைமையிலான UDF கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

காங்கிரஸ் கட்சி 63 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் என்ற விவாதம் எழுந்தது. அப்போது காங்கிரஸ் மேலிடம் கே.சி. வேணுகோபாலை முதல்வராக்க முன்வந்தது. ஆனால், ஐயுஎம்எல் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. வி.டி. சதீசனை முதல்வராக்க வலியுறுத்தியது.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சதீசன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பாஜக கூறுகையில் "ஐயுஎம்எல் முன் காங்கிரஸ் பணிந்து விட்டது. அரசியல் சமரசம் செய்துவிட்டது. கேரளவில் ஏராளமான சட்டமன்ற தொகுதிகள், பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஐயுஎம்எல் ஆதரவு காங்கிரஸ்க்கு தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி முஸ்லிம் லீக் கட்சி" என்று விமர்சித்துள்ளது.

பாராளுமன்ற தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி லாலு பிரசாத் யாதவ் கட்சியுடன் கூட்டணி அமைத்திருந்தது. யாதவ் சமூகம் மற்றும் முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்காக கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் முஸ்லிம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.