Congress Party Decides to Contest Alone in West Bengal  
இந்தியா

மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு | West Bengal

மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்குவங்கத்தின் 294 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இன்று காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி தற்போது தனியாக களமிறங்கவுள்ளது.