உம்மன் சாண்டி
இந்தியா

விழிஞ்சம் துறைமுகத்திற்கு உம்மன் சாண்டி பெயர் சூட்டப்பட வேண்டும்: காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

கேரளம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இரண்டு முறை முதல்வருமான உம்மன் சாண்டி கடந்த 2023-ம் ஆண்டு காலமானார்.

கேரளம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் உம்மன் சாண்டி. இருவர் இரண்டு முறை முதல்வராக இருந்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 18-ந்தேதி, புற்றுநோய்க்கு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில், காலமானார். 79 வயதில் காலமானார். அவரது 3-வது அண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.

அவரது 3-வது நினைவு தினத்தை அனுசரிக்கும் நாளில், விழிஞ்சம் துறைமுகத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் காங்கிரஸ் தலைவர் தாம்பனூர் ரவி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தம்பனூர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழிஞ்சம் துறைமுகத்திற்கு உம்மன் சாண்டி பெயர் சூட்டினால், அது பொருத்தமான அஞ்சலியாக இருக்கும். இதுவரை பார்த்திரா வகையில் விழிஞ்சம் கேரளா மாநிலத்தின் மிகப்பெரிய வளர்ச்சி திட்டமாக உயர்ந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நினைவு தினத்தை அர்த்தமுள்ளதாக்கும் வகையில், அந்த துறைமுகத்திற்கு அதன் வடிவமைப்பாளரான அவரது பெயரே சூட்டப்பட வேண்டும்.

விழிஞ்சம் துறைமுகம்

விழிஞ்சம் துறைமுகம் தொடர்பாக தங்களுக்கு நற்பெயர் கிடைக்க பலர் முயற்சி செய்து வருகிறார்கள்.

விழிஞ்சியத்தில் துறைமுகம் கொண்டு வர உம்மன் சாண்டியின் பங்களிப்பு யதார்த்தத்தை முந்தைய பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு புறந்தள்ளியது.

பெயர் சூட்டும் முடிவை வி.டி. சதீசன் தலைமையிலான UDF அரசு காலம் தாழ்த்தக் கூடாது. இந்த திட்டத்தை சர்ச்சைக்குள் தள்ளக்கூடாது.

உம்மன் சாண்டி கேரளாவே கண்டிராத மிகவும் பிரபலமான தலைவர் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட முதலமைச்சர். மறைந்த அந்த தலைவருக்கு ஒரு நினைவிடம் அமைப்பது மக்களின் விருப்பம்

உம்மன் சாண்டி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வரவேற்கிறேன். இது அவருக்கு மிகச் சிறந்த அஞ்சலியாக அமையும்.

உம்மன் சாண்டிக்கு நினைவிடம்

முன்னாள் அமைச்சர் கே.ஆர். கௌரி அம்மா மற்றும் நடிகர் சலீம் குமார் ஆகியோருக்கு நினைவிடங்கள் அமைப்பதற்கான முன்மொழிவை வரவேற்கிறேன். உம்மன் சாண்டியின் விசயத்திலும் இதேபோன்ற ஆக்கபூர்வமான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும். தனது பொதுவாழ்வு மற்றும் அரசியல் பணிகளை மேற்கொண்ட தலைநகரிலேயே, உம்மன் சாண்டிக்கு நினைவிடம் ஒன்று தாமதமின்றி அமைக்கப்பட வேண்டும்

இவ்வாறு தம்பனூர் ரவி வலியுறுத்தியுள்ளார்.