ஹரிஷ் ராவத்
இந்தியா

உதவியாளர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றிய ED: கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் விலகிய காங்கிரஸ் தலைவர்

தனிப்பட்ட உதவியாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பணம் சிக்கியது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத். இவர் ஏற்கனவே உத்தரகாண்ட் மாநில முதல்வராக இருந்துள்ளார். இவரின் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான முதல்வர் பதவி காலத்தில், சிறப்புப்பணி அதிகாரியாக செயல்பட்டவர் சந்தன் சிங் ஜீனா. தற்போது தனிப்பட்ட உதவியாளராக (PA) உள்ளார்.

32 லட்சம் ரூபாய் பணம்

இவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது 32 லட்சம் ரூபாய் பணம் மற்று 12-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கடிகாரங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்.

உதவியாளர் வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை கைப்பற்றப்பட்ட நிலையில், ஹாரிஷ் ராவத், காங்கிரஸ் கட்சியில் தனது அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT