தெலுங்கானா அமைச்சர் ரேவந்த் ரெட்டி
இந்தியா

ஹிட்லரால் ஈர்க்கப்பட்டு., ரேவந்த் ரெட்டி பேச்சால் தெலுங்கானாவில் சர்ச்சை

ஹிட்லரால் ஈர்க்கப்பட்டு ஒரு அமைப்பிற்கு HYDRAA எனப் பெயரிட்டதாக ரேவந்த் ரெட்டி குறிப்பிட்டது தெலுங்கானா மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியதாவது:-

ஏழை மக்கள் ஏரி போன்றவற்றை ஆக்கிரமிப்பு செய்திருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியும். தற்போது, மிகவும் வசதி படைத்தோர்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உள்ளனர். ஏனென்றால், அவர்களுடைய பண்ணை வீடுகள் மற்றும் கழிவு நீர் குழாய்களை நீர் நிலைகளுடன் இணைப்பதற்காக. இந்த விசயங்கள் அனைத்தையும் நான் கவனத்தில் கொண்டுள்ளேன். அதன்பிறகு HYDRAA என்ற பெயரில் அதிரடிப்படை ஒன்றை உருவாக்க முடிவு செய்தேன். Hydra என்ற வார்த்தை ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமான வார்த்தை. என்னுடைய இந்த ஒட்டுமொத்த அமைப்பில் உள்ளவர்களும் Hydra என்று அழைக்கப்படுவார்கள். இவர்களால் யாரை வேண்டுமென்றாலும் படுகொலை முடியும். ஆகவே, ஹிட்லரிடம் இருந்து உத்வேகத்தை பெற்று இதற்கு HYDRAA எனப் பெயர் வைத்துள்ளேன்.

'ஹைட்ரா' (Hydra) என்பது மார்வெல் காமிக்ஸில் இடம்பெறும் ஒரு கற்பனை அமைப்பாகும். இதன் பெயரில் இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்களின் மேம்பட்ட அறிவியல் பிரிவு செயல்பட்டது.

ஹிட்லரை கொடுங்கோல் ஆட்சி செய்து, அப்பாவி மக்களை கொன்று குவித்தவர் என்ற கடும் விமர்சனம் உண்டு. இந்த நிலையில் ஹிட்லரில் உந்தப்பட்டு என ரேவந்த் ரெட்டி கூறியிருப்பது தெலுங்கானா அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுளு்ளது.

தெலங்கானா முதலமைச்சரின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸின் ஆபத்தான ஹிட்லர் மற்றும் அவசரநிலை கால மனநிலை. மீண்டும் ஒருமுறை வெளிப்படையாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லரால் ஈர்க்கப்பட்டுத்தான் 'HYDRAA' அமைப்பை உருவாக்கியதாக ரேவந்த் ரெட்டி இப்போது வெளிப்படையாகப் பெருமை பேசுகிறார். மேலும், ஐதராபாத்தில் மேற்கொள்ளப்படும் இடிப்பு நடவடிக்கைகளை ஈரான் மற்றும் இஸ்ரேல் போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார். இது அவரது தலைவர் ராகுல் காந்தியின் பேச்சுப் பாணியையே எதிரொலிப்பதாக உள்ளது

அவசரநிலை காலம் முதல் ஹிட்லர் வரை - காங்கிரஸ் எப்போதும் மக்களின் குரலை ஒடுக்கி வந்துள்ளது. தெலுங்கானா மக்களிடம் முதலமைச்சர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும்.

இவ்வாறு கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.