மோதலில் ஈடுபட்ட மீனவர்கள் 
இந்தியா

ஆந்திராவில் மீனவர்களிடையே மோதல்- 4 படகுகள் தீ வைப்பு, 7 பேர் படுகாயம்

விசாகப்பட்டினம் அருகே வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

விசாகப்பட்டினம்:

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் கடற்பகுதியில், மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் வலைகள் தொடர்பாக மீனவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக பிரச்சனை நிலவி வருகிறது. 

இந்நிலையில் இன்று அதிகாலை கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இருதரப்பு மீனவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினர் பயன்படுத்திய 4 மீன்பிடி படகுகளுக்கு தீ வைத்தனர்.  இதை தொடர்ந்து நடைபெற்ற மோதலில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர்களை அனுப்பி தீ வைக்கப்பட்ட படகுகளில் இருந்த மீனவர்களை காப்பாற்றினர். மேலும் அப்பகுதியில் எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவுவதால், வசவானிப்பாலம் மற்றும் ஜலரிபேட்டை ஆகிய பகுதிகளில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.