பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த ஜூன் 20-ந்தேதி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தினர். அப்போது, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான பல்வேறு உயர்க்கல்வி தொடர்பான முறைகேடு தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். ஒரு மாதமாக தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
கடந்த 20-ந்தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது பாராளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர். அவர்கள் நாடாளுமன்றத்தை நெருங்கியதால், மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்படும் நிலை உருவானது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி பேரணியை கலைத்தனர்.
இதில் மாணவர்கள், இளைஞர்கள், காவல்துறையினர் காயம் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்திற்குப் பிறகு மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளது. என்ன இருந்தாலும் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் கரப்பான்பூச்சி ஜனதா தளம் உறுதியாக உள்ளது.
இதற்கிடையே ஜூன் 28-ந்தேதில் முதல் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசடைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவரும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். நேற்று மத்திய அமைச்சர்கள் அவரை சென்று சந்தித்தனர். அப்போது கோரிக்கைகள் ஏற்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
ஜூலை 20-ந்தேதி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டால் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என வாங்சுக் கோரிக்்கை வைத்தார். மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டுள்ளது. இது தொட்ரபாக அவரிடம் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் இருக்கும் அவர், அமைதியான ஜூலை 20 போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த வழக்கும் கிடையாது என எழுத்துப்பூர்வமாக மத்திய அரசு வழங்கியுள்ள அந்த உத்தரவாதத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரில் சந்தித்தோ அல்லது கடிதங்கள் மூலமாகவோ உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதாக வாங்சுக் தெரிவித்தார்.
பல்வேறு நிபந்தனைகள் குறித்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், நாட்டில் ஏற்படக்கூடிய வன்முறையை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை விரைவில் ஒரு தனி காணொளியில் விளக்குவேன். அதேவேளையில், எங்கும் எந்தவிதமான வன்முறையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்," என்று அவர் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது, பொறுப்புக்கூறுல் தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.