இந்தியா

கேரளாவில் உம்மன் சாண்டியின் கல்லறையில் மலர் அஞ்சலி செலுத்திய கிறிஸ் கெய்ல்

அனைத்து மதங்கள் மற்றும் அரசியல் சார்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் வகையில் ஒரு முக்கிய நினைவிடமாக பார்க்கப்படுகிறது உம்மன் சாண்டியின் கல்லறை

கேரளம் புதுப்பள்ளியில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் நினைவிடத்தில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் மலர் அஞ்சலி செலுத்தினார்.

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி கடந்த 2023-ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, அவரது சொந்த ஊரான கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளியில் பாதிரியார்களுக்கான பிரத்தியேகமான சாமதியில் அவருக்கு சிறப்பு கல்லறை கட்டப்பட்டது.

இந்த கல்லறை அனைத்து மதங்கள் மற்றும் அரசியல் சார்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் வகையில் ஒரு முக்கிய நினைவிடமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த நினைவிடத்தில் பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்த கல்லறைக்கு வந்து மனுக்களையும், கடிதங்களையும் விட்டு செல்கின்றனர்.

கோட்டயம் வருகை

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கிறிஸ் கெய்ல் ஹெலிகாப்டர் மூலம் கோட்டயம் வந்து மதியம் சுமார் 12:25 மணியளவில் புதுப்பள்ளியில் தரையிரங்கினார்.

இதையடுத்து கேரள முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டியின் கல்லறைக்கு வந்த அவர் மலரஞ்சலி செலுத்தினார்.