இந்தியா

செப்டம்பரில் இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்

கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல் முறை ஆகும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரிக்ஸ் உச்சி மாநாடு

தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகிறார்.

சீன அதிபர் இந்தியா வருகை

கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு, சீன அதிபர் இந்தியாவிற்கு வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மாமல்லபுரம் சந்திப்பு

முன்னதாக, கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடந்த முறைசாரா உச்சி மாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வந்திருந்தார். அதன்பின், இரு நாட்டு எல்லைப் பதற்றம் காரணமாக நீண்ட நாட்களாக இருதரப்பு உறவுகளில் சுணக்கம் ஏற்பட்டு வந்தது.

எல்லையில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மீண்டும் சீரமைக்கும் என்பதால் சீன அதிபரின் இந்த இந்திய வருகை முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.