தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், பதவியேற்புக்கு பிறகு முதன்முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, மத்திய நிதியமைச்சரிடம் முதலமைச்சர் விஜய் முன்வைத்த கோரிக்கைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளன.
அதன்படி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.