இந்தியா

அரிசி கொட்டும் ஏடிஎம்: சத்தீஸ்கரில் அறிமுகம்

இதில் எடையைக் குறைத்து அளப்பது உள்ளிட்ட மனிதத் தவறுகளுக்கு சாத்தியமே இல்லை.

சத்தீஸ்கரில் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்​கு​வதற்கு வசதி​யாக ரேஷன் ஏடிஎம் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்

சத்தீஸ்கர் மாநிலத்​தில் பொது​மக்​கள் 24 மணி நேரமும் ரேஷன் அரிசி வாங்​கு​வதற்கு வசதி​யாக வங்கி ஏடிஎம் போல செயல்​படும் ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்​ளது.

‘அன்னபூர்த்தி கிரெயின் ஏடிஎம்’ என பெயரிடப்​பட்​டுள்ள இத்திட்டம் தலைநகர் ராய்ப்​பூரின் பிர்​கான் பகு​தி​யில் தொடங்கப்பட்டது. இதன்​மூலம் பயனாளி​கள் 24 மணி நேரமும் தங்​களுக்​கான மாதாந்​திர ரேஷன் அரிசி​யைப் பெற்​றுக்​கொள்ள முடி​யும்.

ரேஷன் கார்டு எடுத்துச்சென்றால் ஸ்கேன் செய்யவேண்டும். ஸ்கேன் செய்த உடன் ரேஷனில் உள்ள மிஷினில் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைக் காட்டும். அதில் உங்கள் பெயரை செலக்ட் செய்து கைரேகை வைக்கவேண்டும்.

கைரேகை வைத்த உடன் இயந்திரமே அதனை சரிபார்த்துவிடும். சரிபார்ப்பிற்குப் பின், அரிசி மற்றும் உணவுப்பொருட்களை தேர்வு செய்தால் துல்லியமாக அளந்து உணவுப்பொருட்களை உங்களுக்கு விநியோகித்து விடும்.

இந்த ரேஷனில் எடையைக் குறைத்து அளப்பது உள்ளிட்ட மனிதத் தவறுகளுக்கு சாத்தியமே இல்லை.

ஏடிஎம் செயல்​படு​வது எப்​படி?

பயனாளி​கள் தங்​களது ரேஷன் அட்டை விவரங்​களை உள்​ளிட்​டு, கைரேகை​யைப் பதிவு செய்​ததும், அவர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட அளவு அரிசி இயந்​திரத்​திலிருந்து வெளியே வரும். இந்த இயந்திரம் சுமார் 2,500 கிலோ அரிசியை சேமித்து வைக்​கும் திறன் கொண்டது.

அரிசியை இயந்​திரத்​தில் நிரப்​புவதும், பயனாளி​களுக்கு விநியோகிப்​பதும் தானி​யங்கி முறை​யில் நடை​பெறும். இந்​தத் திட்​டத்​துக்கு உலக உணவுத் திட்​டம் ஆதரவு அளித்து வரு​கிறது.