இந்தியா

சென்னை புறப்பட இருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்; டெல்லி விமான நிலையத்தில் மீண்டும் நிறுத்தம்

விமானம் புறப்படுவதற்கு தயாராக ஓடுபாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

சென்னை நோக்கி செல்ல இருந்த இண்டிகோ விமானம் ஒன்றிற்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் மிரட்டல் செய்தி வந்ததையடுத்து, அந்த விமானம் டெல்லி விமான நிலையத்தில் மீண்டும் நிறுத்தப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு, அந்த விமானம் பின்னர் சென்னைக்குக் புறப்பட்டு சென்றது.

விமான கண்காணிப்பு இணையதளமான 'Flightradar24.com' அளித்த தகவல்படி, A321 நியோ (A321 neo) ரகத்தை சேர்ந்த 6E 6091 என்ற இந்த டெல்லி-சென்னை விமானம், பிற்பகல் 3.15 மணியளவில் புறப்பட திட்டமிடப்பட்டிருந்தது.

கழிவறையில் மிரட்டல்:

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு (ATC) இந்த விமானம் குறித்த மிரட்டல் செய்தி வந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. விமானத்தின் கழிவறை ஒன்றில் '6E 6091 விமானத்தை இயக்க வேண்டாம்' என்று எழுதப்பட்ட செய்தி கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.

இந்த செய்தி காகிதத்தில் எழுதப்பட்டிருந்ததா அல்லது கழிவறை சுவரில் எழுதப்பட்டிருந்ததா என்பது உடனடியாக தெரியவரவில்லை. விமானம் புறப்படுவதற்கு தயாராக ஓடுபாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

மிரட்டல் செய்தி கிடைத்ததை தொடர்ந்து, நாசவேலை தடுப்பு சோதனைகளுக்காக விமானத்தை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. இது குறித்து இண்டிகோ நிறுவனத்திடமிருந்து கருத்து எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT