ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவரது சகோதரி ஒய்.எஸ். ஷர்மிளா. இவருக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.
வருகிற நவம்பர் மாதம் 25-ந்தேதி ஒய்.எஸ். ஷர்மிளாவின் மகள் அஞ்சலி ரெட்டிக்கும், டாக்டர் சோமலா ரகுராம் ரெட்டிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. ஐதராபாத்தில் டிசம்பர் 5-ந்தேதி வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பெங்களூருவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தனிப்பட்ட முறையில் முக்கிய விருந்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு வீடு தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டிக்கும், ஒய்.எஸ். ஷர்மிளாவுக்கு இடையிலான மோதல், தற்போது ஆந்திர பிரதேச அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாதுகாப்பு காரணமாக மற்றொரு இடத்தை தேடிக்கொள்ள ஜெகன்மோகன் ரெட்டி ஷர்மிளாவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்த நிைையில் ஆந்திர பிரதேச மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி கம்சன் மாமா போன்று செயல்படுகிறார் என விமர்சித்துள்ளார்.
ஜெகன் மோகன் ரெட்டியின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா பேலஸில் மகளின் திருமணத்தை நடத்த ஒய்.எஸ். ஷர்மிளா விரும்புகிறார். ஆனால், பாதுகாப்பு காரணம் சுட்டிக்காட்டு வேறு இடத்தை பார்த்துக் கொள்ள ஜேகன் மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி கட்சி, ஷர்மிளாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையான ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, யெலஹங்காவில் உள்ள சொத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்திருந்தார். இதுவே தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பெங்களூரு இல்லமாகும். அந்தச் சொத்தின் ஒரு பகுதி அவரது மகளுக்கும், மற்றொரு பகுதி அவரது மகனுக்கும் சென்றது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் முழுமையடைந்திருந்த நிலையில், ரெட்டி தனது அனுமதியைத் திரும்ப பெற்றுக்கொண்டுள்ளார்.
அவரைச் சுற்றியிருப்பவர்கள் பாதுகாப்பு குறித்த ஒரு கதையைக் கட்டியெழுப்பினார்கள். ராஜசேகர ரெட்டி இதைவிடக் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்தபோதும், இதே இல்லத்தில் திருமணங்களை நடத்தியிருந்தார். இதில் அவரது சொந்தத் திருமணமும், சுனிதாவின் திருமணமும் அடங்கும்.
ஒரு நபரின் இத்தகைய மனநிலை மாநிலத்திற்கு எவ்வளவு ஆபத்தானதாகவும், இடர்பாடு நிறைந்ததாகவும் மாறக்கூடும் என்பதை விளக்குவதே எனது நோக்கம். "அவர் முதலமைச்சராகவும், கட்சித் தலைவராகவும், மகனாகவும், சகோதரராகவும், ஏன் ஒரு குடிமகனாகவும் கூட தோல்வியடைந்துவிட்டார்.
சொத்து தகராறுகளுக்காக குடும்ப உறவுகளை பலிகொடுக்கக் கூடாது. இத்தகைய நடத்தையின் பொருள் என்ன என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்து புராண கதையில் கிருஷ்ணனின் தாய்மாமன் கம்சன், சகோதரியை சிறைப்பிடித்து கிருஷ்ணனை கொலை செய்ய முயற்சி மேற்கொள்வார். இதை சுட்டிக்காட்டி ஜெகன்மோகன் ரெட்டியை கம்சன் மாமா என சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.