இந்தியா

மோன்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வான்வழியாக ஆய்வு செய்தார். சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.

வங்கக் கடலில் உருவான புயல் மோன்தா தீவிர புயலாக மாறியது. இந்த புயல் நேற்று இரவு மசூலிபட்டினம்- கலிங்கபட்டினம் இடையே கரையை கடந்தது.

இந்த புயல் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது.

பல இடங்களில் மரங்கள் பலத்த காற்றால் சாய்ந்தன. ஆபத்தான பகுதிகளில் இருந்து 76,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். 800 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது.

இந்நிலையில், ஆந்திராவில் மோன்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை, முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாக ஆய்வு செய்தார்.

இதனையடுத்து கொனசீமா மாவட்டத்தில் மோன்தா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அமைக்கப்பட்ட மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலம் விசாரித்தார்.

பின்னர், நீரில் மூழ்கிய பயிர் வயல்களை ஆய்வு செய்த அவர், பயிர் சேதம் விரைவில் மதிப்பிடப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

#TeamAPInAction #CycloneMontha డాక్టర్ బీఆర్ అంబేద్కర్ కోనసీమ జిల్లా, అల్లవరం మండలం, ఓడలరేవులో మొంథా తుఫాను బాధితుల కోసం ఏర్పాటు చేసిన పునరావాస కేంద్రానికి వెళ్లి బాధితుల క్షేమ సమాచారాన్ని అడిగి తెలుసుకున్నాను. నిర్వాసిత కుటుంబాలకు ప్రభుత్వం నుండి నిత్యావసర సరుకులు, 25 కేజీల… pic.twitter.com/1orfcJXHpx

SCROLL FOR NEXT