IDBI வங்கி
இந்தியா

IDBI வங்கியின் 60.72% பங்குகளை கனடா நிறுவனத்திற்கு ரூ. 52,878 கோடிக்கு விற்பனை செய்ய அமைச்சரை ஒப்புதல்

மத்திய மற்றும் எல்ஐசி ஆகியவளை IDBI வங்கியின் பங்குகளை வைத்திருந்தது.

ஏர் இந்தியா விற்பனைக்குப் பிறகு நாட்டின் மிகப்பெரிய மூலோபாய முதலீட்டு விலக்கல் (strategic disinvestment) நடவடிக்கையாக அமையும்.

IDBI வங்கியில் 60.72% பங்குகளை கனடாவை தலைமையிடமாக கொண்ட பேர்ஃபாக்ஸ் (Fairfax) நிறுவனத்திற்கு ரூ. 52,878 கோடிக்கு விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

LIC-யின் 30.24 சதவீத பங்குகளும் அடங்கும்

பேர்ஃபாக்ஸ் நிறுவனம் கையகப்படுத்தவுள்ள இந்த 60.72 சதவீத பங்குகளில், அரசின் 30.48 சதவீத பங்குகளும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) 30.24 சதவீத பங்குகளும் அடங்கும்.

IDBI வங்கியின் 60.72 சதவீத பங்குகளை ரூ. 52,878 கோடிக்கு கனடா இன்க் (Canada Inc.) நிறுவனத்திற்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. கனடா இன்க் நிறுவனத்தின் தாய் நிறுவனம் பேர்ஃபாக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் (Fairfax Financial Holdings) ஆகும்.

இந்த நடவடிக்கை, வங்கியின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மாற்றுவதற்கான அரசின் நீண்டகாலத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறது. மேலும், இது நிறைவடையும்போது, ​​ஏர் இந்தியா விற்பனைக்குப் பிறகு நாட்டின் மிகப்பெரிய மூலோபாய முதலீட்டு விலக்கல் (strategic disinvestment) நடவடிக்கையாக அமையும்.

ஒரு பங்கு ரூ. 81

பேர்ஃபாக்ஸ் நிறுவனம் கையகப்படுத்தவுள்ள இந்த 60.72 சதவீத பங்குகளில், அரசின் 30.48 சதவீத பங்குகளும், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) 30.24 சதவீத பங்குகளும் அடங்கும். ஒரு பங்கிற்கு ரூ. 81 என்ற விலையில் பேர்ஃபாக்ஸ் நிறுவனம் இந்த ஏலத்தை வென்றது.

இந்த நடவடிக்கை நிறைவடையும் போது, ​​நமது பொருளாதாரத்தின் நிதித்துறையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடாக (FDI) இது அமையும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் IDBI வங்கியில் LIC-யின் பங்கு இருப்பு 19 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அரசிடம் எஞ்சியிருக்கும் பங்குகள் திறந்த சந்தை மூலம் விற்பனை செய்யப்படும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த பரிவர்த்தனையை ஒரு மூலோபாய முதலீட்டு விலக்கல் என்பதற்குப் பதிலாக மூலோபாய மறுசீரமைப்பு என்று விவரித்தார். மேலும், அரசாங்கமும் எல்.ஐ.சி-யும் வங்கியில் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

பேர்ஃபாக்ஸ் ஏற்கனவே சிஎஸ்பி வங்கியில் பங்கு வைத்துள்ளது

சி.எஸ்.பி வங்கியில் பங்கு வைத்திருக்கும் பேர்ஃபாக்ஸ், அதை ஐ.டி.பி.ஐ வங்கியுடன் இணைக்க வேண்டும் அல்லது 2 ஆண்டுகளுக்குள் அந்தப் பங்கிலிருந்து வெளியேற வேண்டும். பேர்ஃபாக்ஸ், ஐ.டி.பி.ஐ வங்கியின் சிறுபான்மை பங்குதாரர்களுக்கு ஒரு திறந்த சலுகையையும் வழங்க வேண்டும்.

நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் இந்த ஒப்பந்தம் முடிக்கப்படும் என்று முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை (டி.ஐ.பி.ஏ.எம்) செயலாளர் அருனிஷ் சாவ்லா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT