இந்தியா

பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. "விமான Seat selection கட்டணம் ரத்து" அறிவிப்பை நிறுத்தி வைத்த மத்திய அரசு

ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் போன்ற விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

ஒவ்வொரு விமானத்திலும் குறைந்தது 60% இருக்கைகள் seat selection charge என்ற கூடுதல் கட்டணம் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அண்மையில் உத்தரவிட்டது.

ஆனால் ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஆகாசா ஏர் போன்ற விமான நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த உத்தரவு விமானக் கட்டண அமைப்பைப் பாதிக்கும் என்றும், இந்தியாவில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடற்ற கட்டணக் கொள்கைக்கு எதிரானது என்றும் அவை வாதிட்டன.

இருக்கை தேர்வு கட்டணத்தை ரத்து செய்தால், அந்த வருவாய் இழப்பை ஈடுகட்ட அடிப்படை விமான கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும் என்று நிறுவனங்கள் எச்சரித்தன.

இந்நிலையில் அமலுக்கு வந்த சில வாரங்களில் இந்த கூடுதல் கட்டண விலக்கு, மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை விரிவாக ஆய்வு செய்து முடிவெடுக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.