இந்தியா

பாகிஸ்தான் தொடர்களை இந்தியாவில் ஒளிபரப்பக் கூடாது - நெட்ஃபிளிக்ஸ்-க்கு மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தல்!

​​‘ஜோ பச்சே ஹைன் சங் சமாயித் லோ’ தொடர் டிச.4ம் தேதி வெளியாகிறது.

பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் படங்கள், வலைதொடர்களை இந்தியாவில் ஒளிபரப்பக்கூடாது என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு நினைவூட்டியுள்ளது.

நடிகர்கள் ஃபவாத் கான் மற்றும் மஹிரா கான் நடித்துள்ள ​​‘ஜோ பச்சே ஹைன் சங் சமைத் லோ’ தொடருக்கு எதிர்ப்புகள் எழுந்து வரும்நிலையில், இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.

அகில இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சங்கம் (AICWA) மற்றும் மேற்கு இந்தியத் திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு (FWICE) ஆகிய அமைப்புகள் இந்தத் தொடரை இந்தியாவில் தடை செய்யக் கோரிப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தன.

ஹனியா ஆமிர், அஹத் ரஸா மிர், இக்ரா அஜீஸ் மற்றும் சனம் சயீத் ஆகியோரும் நடித்துள்ள இந்தத் தொடர், டிச.4ம் தேதி உலகளவில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

பஹல்காம் தாக்குதல்

பாகிஸ்தானில் தயாரிக்கப்படும் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் உள்ளடக்கங்களையும் இந்தியாவில் ஒளிபரப்ப கடந்த ஆண்டே மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தடைவிதித்தது.

2025 ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசியப் பாதுகாப்பு காரணங்களுக்காக ஓடிடி தளங்களுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

நெட்ஃபிளிக்ஸின் விளக்கம்

இந்தியச் சந்தாதாரர்களுக்குப் பாகிஸ்தானியத் திரைப்படங்களோ அல்லது தொடர்களோ எதுவும் கிடைக்க செய்யப்படவில்லை என கடந்தாண்டு ஜூன் மாதமே நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அமைச்சகத்திடம் தெரிவித்திருந்தது.

தற்போது அந்த உறுதிமொழியைக் காப்பாற்றுமாறு அமைச்சகம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

SCROLL FOR NEXT