இந்தியா

இது நல்லதுக்கு இல்ல.. தகாத உறவு, ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த மத்திய அரசு | Affidavit

இந்திய குடும்ப அமைப்பின் மூலமாக விளங்கும் திருமண பந்தத்தின் புனிதத்தை சீர்குலைத்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்

உச்ச நீதிமன்றம் 2018-ஆம் ஆண்டில் இரண்டு முக்கியத் தீர்ப்புகளை வழங்கியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 497-இன் கீழ் தகாத உறவைக் குற்றமாக்குவதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

அதே ஆண்டில், மற்றொரு முக்கியத் தீர்ப்பில், பிரிவு 377-ஐ பகுதியளவு ரத்து செய்தது. இதன் மூலம், பரஸ்பர சம்மதத்துடன் வயது வந்த இருவருக்கு இடையேயான ஓரினச்சேர்க்கை உறவுகள் சட்டப்பூர்வமாக்கப்பட்டன.

அந்த நேரத்தில், இந்தத் தீர்ப்புகள் சிவில் உரிமை அமைப்புகளால் வரவேற்கப்பட்டன. இருப்பினும், சமீபத்தில், மத்திய அரசு இந்த இரண்டு தீர்ப்புகளின் சட்டப்பூர்வத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய வழக்கு ஒன்றில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிராமண பத்திரத்தில், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் "நல்ல முடிவுகள் அல்ல" இந்தத் தீர்ப்புகள் இந்திய சமூகம், திருமண முறை மற்றும் பாரம்பரிய விழுமியங்கள் மீது கடுமையான எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்

உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்புகள், சமூகத்தின் சமநிலையையும், குறிப்பாக இந்திய குடும்ப அமைப்பின் மூலமாக விளங்கும் திருமண பந்தத்தின் புனிதத்தை சீர்குலைத்து கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டுள்ளது. மத்திய அரசின் பதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகங்களில் விவாத பொருளாக மாறியுள்ளது.