இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அப்டேட்: தசரா பண்டிகைக்குப் பின் மும்பையில் கூடுகிறது 8வது ஊதியக் குழு கூட்டம்!

அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றங்கள், பென்சன் பலன்கள் மற்றும் பல்வேறு படிகள் தொடர்பான கோரிக்கைகளையும் குறைகளையும் விரிவாகக் கேட்டறிவது திட்டமிடப்பட்டுள்ளது.

தசரா பண்டிகையைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் மும்பையில் அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் 8ஆவது ஊதியக் குழுவிடம் முக்கியமான கோரிக்கைகளும் பரிந்துரைகளும் வைக்கப்படும்.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 8வது ஊதியக் குழுவின் அடுத்த கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்டோபர் தொடக்கத்தில் பெங்களூருவில் நடைபெற்ற வெற்றிகரமான கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

8வது ஊதியக் குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இக்கூட்டம் வரும் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்படவிருக்கும் நிலையில், பண்டிகை முடிந்த கையோடு நடைபெறும் இந்தக் கூட்டம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் நடைபெறவுள்ள இந்த இரண்டு நாள் கூட்டத்தில், ஊதியக் குழுவின் பிரதிநிதிகள் முக்கிய ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கூட்டத்தின் முக்கிய நோக்கமாக, அரசு ஊழியர்களின் ஊதிய மாற்றங்கள், பென்சன் பலன்கள் மற்றும் பல்வேறு படிகள் தொடர்பான கோரிக்கைகளையும் குறைகளையும் விரிவாகக் கேட்டறிவது திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், டெல்லி, சென்னை, உத்தரப் பிரதேசம், சண்டிகர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் ஏற்கனவே நடைபெற்ற கூட்டங்களைப் போலவே, மும்பை கூட்டத்திலும் அகவிலைப்படி உயர்வு, வீட்டு வாடகைப் படி மற்றும் ஓய்வூதிய பலன்கள் குறித்த கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்படவுள்ளன.

நேரடிப் பரிசீலனை

இந்த ஆலோசனைக் கூட்டங்களுடன் நின்றுவிடாமல், 8வது ஊதியக் குழுவின் குழுவினர் மும்பையில் உள்ள மத்திய ரெயில்வே துறை அலுவலகங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். ரெயில்வே துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களின் பணிச்சூழல், அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் சவால்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சன் பிரகாஷ் தேசாய் தலைமையிலான இந்த உயர்மட்ட ஊதியக் குழு, நாடு முழுவதும் பெறப்படும் அனைத்து பரிந்துரைகளையும் கவனமாக ஆய்வு செய்து தனது இறுதி அறிக்கையை விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கும்.

சம்பள உயர்வு

இதுவரை பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும், 8வது ஊதியக் குழுவின் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பள உயர்வு மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்த இறுதி விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இருப்பினும், ஙஇந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் முழுமையாக அமலுக்கு வரும் பட்சத்தில், நாட்டின் கோடிக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் படிகளில் மிகப்பெரிய சாதகமான மாற்றங்கள் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

SCROLL FOR NEXT