நடப்பு ரபி பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய பட்ஜெட்டை ரூ. 62,370 கோடியாக உயர்த்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது முந்தைய பருவத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.37,952 கோடியை விட 64.3% அதிகமாகும்.
சர்வதேச சந்தையில் உரங்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டிஏபி, நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற தாவர ஊட்டச்சத்துகளுக்கான உர வகைகள் உட்பட பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களுக்கான மானியங்கள் நடப்பு ரபி பருவத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும்.
இதன் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் மானிய விலையிலும், மலிவாகவும், நியாயமான விலையில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
கடந்த ரபி பருவத்திற்கு, ஒரு கிலோகிராம் ஊட்டச்சத்து மானியத்தை நைட்ரஜனுக்கு ரூ.43.02, பாஸ்பேட்டுக்கு ரூ.47.96, பொட்டாஷுக்கு ரூ.2.38 மற்றும் கந்தகத்திற்கு ரூ.2.87 என அரசு நிர்ணயித்திருந்தது.
இந்த புதிய மானிய விகிதங்கள் 2026 அக்டோபர் 1 முதல் 2027 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும்.