12வகுப்பு சிபிஎஸ்சி விடைத்தாள்களை கணினித் திரை வழியாகத் திருத்தும் ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் (OSM) சிஸ்டத்தில் குளறுபடி கண்டறியப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து விவாதிக்க கல்விக்கான பாராளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று கூடுகிறது.
காலை 11:00 மணிக்கு நாடாளுமன்ற இணைப்பு கட்டிடத்தில் கூட்டம் தொடங்கியது.
ஓஎஸ்எம் முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் அதில் ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்களின் தேர்வு முடிவுகளில் ஏதேனும் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
மேலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் மும்மொழிக் கொள்கை செயல்படுத்தப்படுவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பள்ளி கல்வித் துறைச் செயலாளர் மற்றும் சிபிஎஸ்சி தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு நிலைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.
இதற்கிடையில், குளறுபடியால் தாமதமான 12ஆம் வகுப்பு மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டு போர்ட்டல் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கியுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.