காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனுவில்,
* விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய நீரை கர்நாடகம் அளிக்க தவறி விட்டது.
* 26.954 டி.எம்.சி. நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு தந்திருக்க வேண்டும்.
* தமிழகத்திற்கு உரிய நேரத்தில் காவிரியில் கர்நாடக அரசு நீரை திறந்து விடவில்லை.
* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.
* ஆக.3 நிலவரப்படி கேஆர்எஸ் அணையில் 23 டிஎம்சியும், கபினி அணையில் 18.6 டிஎம்சியும், ஹாரங்கியில் 7.8 டிஎம்சியும், ஹேமாவதி அணையில் 28 டிஎம்சி என மொத்தம் 77.53 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.
* 77.53 டிஎம்சி தண்ணீர் உள்ளதால் விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதில் கர்நாடகாவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை.
* காவிரியில் 15 நாட்களுக்கு விநாடிக்கு 3500 கன அடி நீர் திறக்க கர்நாடகாவிற்கு மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.
* காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும் பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 550 கனஅடி நீர் தான் வருகிறது.
* தமிழ்நாட்டிற்கு விகிதாச்சாரப்படி கிடைக்கவேண்டிய நீர் 26.954 டிஎம்சி.
* உரிய நேரத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.