இந்தியா

60 அடி பள்ளத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து தொழிலாளி உயிரிழப்பு

மேற்கு வங்கத்தை சேர்ந்த சுதீர் உள்பட பலர் ஈடுபட்டிருந்தனர். 16 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள காக்காடம்பொயில் பகுதியில் கட்டிடப் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுதீர் உள்பட பலர் ஈடுபட்டிருந்தனர். நேற்று இரவு அவர்கள் சரக்கு வேனில் வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தனர்.

கூடரஞ்சி கூம்பாரா பகுதியில் வந்த போது எதிர்பாராதவிதமாக சரக்கு வேன், 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுதீர் பரிதாபமாக இறந்தார். மேலும் 16 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.