குஜராத்தில் சிஎன்ஜி நிரப்பிக்கொண்டிருந்தபோது கார் சிலிண்டர் வெடித்துச் சிதறிய வீடியோ வெளியாகி உள்ளது.
குஜராத்தின் வதோதராவில் கர்சன் தேசிய நெடுஞ்சாலை அருகே எரிபொருள் நிலையத்தில் கடந்த அக்டோபர் 1 அன்று சிஎன்ஜி இயற்கை எரிவாயு நிரப்பிக் கொண்டிருந்தபோது கார் சிலிண்டர் வெடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அங்கு ஜிண்டால் நிறுவனத்திற்கு எதிரே உள்ள சிஎன்ஜி நிலையத்தில், காருக்கு சிஎன்ஜி நிரப்பிக் கொண்டிருந்தபோது அதன் சிலிண்டர் வெடித்ததில் சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிப்பின் தீவிரத்தால், காரின் உடைந்த கண்ணாடித் துண்டுகள் பல மீட்டர் தொலைவில் சிதறிக் விழுந்தன. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் இரண்டு வாகனங்களும் வெடிப்பினால் சேதமடைந்ததாகத் தெரியவருகிறது.
நல்லவேளையாக, வெடிப்பு நிகழ்ந்தபோது காருக்குள் யாரும் இல்லை. இதனால், ஒரு பெரும் துயரம் தவிர்க்கப்பட்டதுடன், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து, கர்சன் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.