புதுமணத் தம்பதிகளான ஸ்ரீதேஜா மற்றும் கைவல்யாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெல்லூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை வேகமாக சென்ற கார் பாலத்தில் மோதி கால்வாயில் கவிழ்ந்தது.
காரில் பயணித்த டிரைவர் பிரவீன், வெங்கட் ராவ், பாபட்லாவைச் சேர்ந்த சுஜாதா மற்றும் சீதா மகாலட்சுமி ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். புதுமணத் தம்பதிகளான ஸ்ரீதேஜா மற்றும் கைவல்யாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
இந்த நிலையில், அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஒங்கோல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.