குடிநீரில் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளை மீறி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அனுமதி அளித்துள்ளது.
பிஸ்லெரி நிறுவன கிளையில் இருந்து எடுக்கப்பட்ட மினரல் வாட்டர் அல்லாத பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் சோதனைக்கு உட்படாதபட்டது.
பிஸ்லெரி தண்ணீரின் ஆரம்பகட்ட ஆய்வகப் பரிசோதனையில், புரோமேட்டின் அளவு நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியிருப்பது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக, 2006 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் அது பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
நிறுவனம் மேல்முறையீடு செய்த பிறகு, அந்த மாதிரி மேலதிக பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
இரண்டாவது சுற்றுப் பரிசோதனையிலும், அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன்கள் (PAHs) என்ற கண்டறியப்பட்டதால், அந்த நீர் பாதுகாப்பற்றது என்பது உறுதி செய்யப்பட்டது.
புரோமேட் மற்றும் பாலிநியூக்ளியர் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் புற்றுநோயை உண்டாக்குவன ஆகும்.
இரு ஆய்வகங்களின் அறிக்கைகளும் அந்த நீர் பாதுகாப்பற்றது என்பதை உறுதிப்படுத்தியதாக FSSAI தெரிவித்துள்ளது.
எனவே அந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிந்து சட்ட நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.