மேற்கு வங்கத்தில் இன்று (ஏப்ரல் 23) முதல் தொடங்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தடுப்பு சட்டங்களின் விதிகளுக்கு இணங்க முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) அறிவுறுத்தல்களின்படி சுமார் 800 திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஜய் பால் மற்றும் நீதிபதி பார்த்த சாரதி சென் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
புதன்கிழமை மாலை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், தடுப்பு காவல் அல்லது நடவடிக்கைக்கான அதிகாரத்தை பயன்படுத்தும்போது, அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தடுப்பு காவல் சட்டத்திற்கு முற்றிலும் இணங்க செயல்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டிருந்ததை போல, ஒருவரை "பிரச்சனை செய்யக்கூடியவர்கள்" என்று முத்திரை குத்தி மட்டுமே கைது செய்யவோ அல்லது காவலில் வைக்கவோ முடியாது என்பதை டிவிஷன் பெஞ்ச் தெளிவுபடுத்தியது.