இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தற்போது தலைமை நீதிபதி மற்றும் 33 நீதிபதிகள் உள்ளனர். அடுத்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மேலும் 4 நீதிபதிகள் கூடுதலாக சேர்க்கப்படுவதற்கான மசோதா கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியபின் எண்ணிக்கை 38 ஆக உயரும். 1956-ன் உச்சநீதிமன்றம் சட்டத்தின்படி தலைமை நீதிபதியை தவிர்த்து அதிகபட்சமாக 10 நீதிபதிகள் இருக்கலாம். 1960-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டு அது 13 ஆக அதிரிக்கப்பட்டது. பின்னர் 17 ஆக உயர்த்தப்பட்டது.
1986-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது 25 ஆக உயர்த்தப்பட்டது. 2009-ல் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு 30 ஆக அதிரிக்கப்பட்டது. கடைசியாக தலைமை நீதிபதியை தவிர்த்து 33 நீதிபதிகளாக உயர்த்த 2019-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.