ஆண்டுக்கு 3 முறை நடைபெற்று வந்த பட்டயக் கணக்காளர் இறுதித்தேர்வு 2 முறையாக நடைபெறும் என்று ஐசிஏஐ அறிவித்துள்ளது.
பட்டயக் கணக்காளர் இறுதித் தேர்வுகள் ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் மாதம் என ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், பட்டயக் கணக்காளர் இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடைபெறும் எனவும், மே மற்றும் நவம்பர் மாதத்தில் மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சி.ஏ. இறுதித்தேர்வு ஆண்டுக்கு 2 முறை மட்டுமே நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.