உத்தரகாண்டில் ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலியாகினர்
உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ்-பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில், குலார் அருகே இன்று காலை பயணிகள் பேருந்து பாலத்திலிருந்து சுமார் 100 மீட்டர் கீழே ஓடையில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.
விஸ்வநாத் சேவா நிறுவனத்தால் இயக்கப்படும் அந்தப் பேருந்து, ஹரித்வாரிலிருந்து கர்ணபிரயாகத்திற்கு 34 பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
அதிகாலை சுமார் 3.30 மணியளவில் ஹரித்வாரில் இருந்து புறப்பட்டு கர்ணபிரயாக் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
வாகனம் பலத்த சேதமடைந்ததுடன், பல பயணிகள் சிக்கிக்கொண்டனர். மற்றவர்கள் கீழே இருந்த ஓடையில் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தைத் தொடர்ந்து, பியாசி மற்றும் தல்வாலாவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த மாநில பேரிடர் மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியைத் தொடங்கினர்.
பாலத்திற்குக் கீழே விழுந்திருந்த பேருந்தை அடைவது மீட்புப் பணியாளர்களுக்கு ஒரு சவாலான பணியாக இருந்தது.
காயமடைந்த பயணிகள் வெளியே இழுக்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் பலர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். காயமடைந்த பயணிகளில் உத்தரகாண்ட், பீகார், ஜார்க்கண்ட், அசாம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் அடங்குவர்.
டெஹ்ரி மாவட்ட ஆட்சியர் நித்திகா கண்டேல்வால் நிலைமையை மேற்பார்வையிடவும், நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்கவும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை ஒருபுறம் நடந்து வருகிறது. விபத்துக்கான காரணம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.