தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து 42 பயணிகளுடன் தனியார் பஸ் ஒன்று நேற்று இரவு ஆந்திர மாநிலம் ஏலூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை சூர்யா பேட்டை மாவட்டம், கொடடா அடுத்த தோர குண்டா புறநகர் பகுதியில் வந்தபோது சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் 5 பெண் பயணிகள் உட்பட 6 பேர் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 20 பயணிகள் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு கொடடா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.