நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்,காங்.செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா 
இந்தியா

சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்கு துரோகம் - பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கருத்து

ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளது.

புதுடெல்லி:


மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா

தெரிவித்துள்ளதாவது:

மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும்  நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் துரோகம் இழைத்துள்ளனர்.ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் 

நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 முழு ஊதியக் குறைப்பு மற்றும் பணவீக்கத்தை முறியடிக்க சம்பளம் வாங்குவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் நிவாரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் தங்கள் நடவடிக்கைள் மூலம் அவர்களை மீண்டும் ஏமாற்றியுள்ளனர். இது இந்தியாவின் சம்பளம் பெறும் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு செய்யும் துரோகம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை - மத்திய நிதி மந்திரி