இந்தியா

மதுபான கொள்கை ஊழல் வழக்கு: சந்திரசேகர ராவ் மகளுக்கு 23ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல்

பிஆர்எஸ் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி:

தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகியுள்ள கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், பி.ஆர்.எஸ். தலைவர் கே.கவிதாவை வரும் 23-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட்டு நீதிபதி எம்.கே.நாக்பால் உத்தரவிட்டுள்ளார்.