ஜி ஜின்பிங்
இந்தியா

ஈரான் போர் உலக நலன்களுக்கு உகந்தது அல்ல: பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு

மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படக்கூடாது

இந்தியாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் தலைவர்கள் தற்போதைய மோதல்கள் மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச சமூகத்தின் மீது அவை ஏற்படுத்தும் பரந்த விளைவுகள் குறித்து விவாதித்தனர்.

அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியதாவது:-

* பிரிக்ஸ் நாடுகள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் முன்னோடிப் பங்காற்ற வேண்டும்

* உலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பாதிக்கும் விவகாரங்களில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பு இருக்க வேண்டும்.

* மத்திய கிழக்கில் நடைபெறும் போர் அப்பகுதி மக்கள் மத்தியில் கடுமையான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வதேச சமூகத்தின் பொதுவான நலன்களுக்கு உகந்தது அல்ல.

* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிம்மதியை நிலைநாட்டத் தனது பங்கை ஆற்றுவதற்கு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் இணைந்து சீனா செயல்படும்.

​​* மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் போர் ஏற்படக்கூடாது

* பிரிக்ஸ் நாடுகள் வரலாற்றின் சரியான பக்கம் உறுதியாக நிற்க வேண்டும்.

* 2027 பிரிக்ஸ் மாநாட்டை சீனா நடத்தும்.

இவ்வாறு ஜி ஜின்பிங் பேசினார்.

SCROLL FOR NEXT