சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் 
இந்தியா

எல்லையில் பறந்த சீன தயாரிப்பு ட்ரோன்- பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்

நான்கு பேட்டரிகள் மூலம் இயக்கப்படும் இந்த ட்ரோன், 23 கிலோ எடை கொண்டது. சுமார் 10 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது.

மாலை மலர்

புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் ஒன்று நேற்று இரவு 11.10 மணி அளவில் பறந்தது. பெரோஸ்பூர் செக்டர் வான் எல்லையில் பறந்த சீனாவின் தயாரிப்பான அந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பி.எஸ்.எப்) சுட்டு வீழ்த்தினர். 

கருப்பு நிறம் கொண்ட அந்த ட்ரோன் சர்வதேச எல்லையில் இருந்து 300 மீட்டர் தூரம் முன்னேறி, எல்லை வேலியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் சந்தேகப்படும் வகையில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பி.எஸ்.எப். தெரிவித்துள்ளது.

நான்கு பேட்டரிகள் மூலம் இயக்கப்படும் இந்த ட்ரோன்,  23 கிலோ எடை கொண்டது. சுமார் 10 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. எனினும், எல்லை தாண்டி வந்தபோது அந்த ட்ரோனில் போதைப்பொருள், ஆயுதங்கள் அல்லது வெடிமருந்துகள் போன்ற எந்த பொருளும் அனுப்பப்படவில்லை.