இந்தியா

பிஎம்டபுள்யூ கார் ஜன்னலை உடைத்து ரூ.14 லட்சம் அபேஸ் செய்த பலே திருடர்கள்- வைரலாகும் சிசிடிவி காட்சி

வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சாலை ஒன்றில் கருப்பு நிறத்தில் பிஎம்டபுள்யூ சொகுசு கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

அப்போது, அந்த கார் அருகே மாஸ்க் அணிந்து வந்த மர்ம நபர்கள் இருவரில் ஒருவர் ஆயுதத்தை கொண்டு கார் ஜன்னலை உடைத்து உள்ளே இறங்கி பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

இரு சக்கர வாகனத்தில் தயார் நிலையில் இருந்த அவனது கூட்டாளியாக மற்றொரு நபருடன் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவானது. பணத்தை தொலைத்தவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.