இந்தியா

அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன்: ரூ.1 கோடி பெட் கட்டிய பா.ஜ.க. வேட்பாளர்

கேரளாவில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மூத்த அரசியல்வாதியும் பா.ஜ.க. வேட்பாளருமான பி.சி.ஜார்ஜ்,

கேரளாவின் பூஞ்சார் சட்டமன்றத் தொகுதியில் மூத்த அரசியல்வாதியும் பா.ஜ.க. வேட்பாளருமான பி.சி.ஜார்ஜ் போட்டியிட்டார். நாளை அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், பி.சி.ஜார்ஜ் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், பூஞ்சார் தொகுதியில் நான் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன். யாருக்காவது சந்தேகம் இருந்தால், அவர்கள் முன்வந்து ஒரு கோடி ரூபாய் பந்தயம் கட்டலாம் என தெரிவித்தார்.

அண்டை தொகுதியான பாலாவில் தனது மகன் ஷோன் ஜார்ஜின் வெற்றி பெறுவார். வரவிருக்கும் சட்டமன்றத் தொடரில் தந்தை - மகன் இருவரும் ஒன்றாக சபைக்குள் நுழைவார்கள் எனவும் கூறினார்.