மேற்கு வங்கத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டம் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் 1.22 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது.
மேற்கு வங்கத்தின் புர்பா மெதினிபூர் மாவட்டம் நந்திகிராம் சட்டசபை தொகுதியிலும், முர்ஷிதாபாத் மாவட்டம் ரெஜிநகர் தொகுதியிலும் கடந்த 6-ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடந்தது.
முதலமைச்சர் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ராஜினாமா செய்த தொகுதியில் நந்திகிராமில் அவரது முன்னாள் உதவியாளர் சந்திரநாத் ரத்தின் தாயார் ஹாசி ராணிரத், பாஜக வேட்பாளராக போட்டியிட்டார்.
சுவேந்து அதிகாரி முதல்வரான சில தினம் பின் சந்திரநாத் ரத் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் அவரது தாயாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் அணியின் வேட்பாளர், போட்டியில் இருந்து விலகியதால், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது முதல் பா.ஜ.க. வேட்பாளர் ஹசிராணி ராத், நந்திகிராமில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.
இந்நிலையில், நந்திகிராமில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹசிராணி ராத் 1,64,427 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.
இதன்மூலம் சுமார் 1.22 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் 41,674 வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.