கேரளாவில் வரும் 9-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் இடது முன்னணி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ..க. இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
தேர்த்ல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் முக்கிய தலைவர்கள் முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கேரளாவில் ராகுல் காந்தியைக் குறை கூறிய பினராயி விஜயன், டெல்லி, வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் அவருடன் ஏன் நட்பு பாராட்டுகிறார்?
டெல்லியில் நட்பை முறித்துக்கொண்டு, ஏன் கூட்டணி அமைக்கிறீர்கள்? டெல்லியில் நண்பர்கள் போல் நடித்துக்கொண்டு, கேரளாவில் மல்யுத்தம் செய்கிறார்கள்.
சபரிமலை தங்கக் கொள்ளைக்கு இருவருமே பொறுப்பு; இருவரும் தேசவிரோத சக்திகளை ஊக்குவிக்கிறார்கள் என காட்டமாகத் தெரிவித்தார்.