அசாம், கேரளா ஆகிய 2 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் 9-ந்தேதியும், தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ந்தேதியும், மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29-ந் தேதிகளிலும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறுகிறது.
140 உறுப்பினர்களை கொண்ட கேரள சட்டசபைக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க ஏற்கனவே அறிவித்து இருந்தது. 47 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க இன்று வெளியிட்டது. 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மாநில பா.ஜ.க முன்னாள் தலைவரும், மிசோரம் மாநில முன்னாள் கவர்னருமான கும்மனம் ராஜசேகரனுக்கு டிக்கெட் கிடைத்துள்ளது. அவர் ஆரன்முனா தொகுதியில் போட்டியிடுகிறார். நத்திகா தொகுதியில் சி.சி.முகுந்தன் போட்டியிடுகிறார். அவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து வந்தவர் ஆவார். பா.ஜ.க இதுவரை 86 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதேபோல அசாம் மாநிலத்துக்கான முதல் கட்ட வேட்பாளர்களையும் பா.ஜ.க இன்று அறிவித்தது. மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 88 இடங்களுக்கு வேட்பாளர்களை வெளியிட்டு உள்ளது.
ஜலுக்பாரி தொகுதியில் அசாம் முதல் அமைச்சர் ஹிமந்தா சர்மா போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி நேற்று பா.ஜ.கவில் இணைந்த பிரத்யுத் போர்டோலாய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் திஸ்புர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேரள முதல்வரும், இடது ஜனநாயக முன்னணி வேட்பாளருமான பினராயி விஜயன் தர்மடம் சட்டப் சபை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் தனது வேட்புமனு ஆவணங்களை காலை 11 மணியளவில் தலச்சேரி சார்-பதிவாளர் அலுவ லகத்தில் சமர்ப்பித்தார். அவற்றை கண்ணூர் பதிவா ளர் ஏ.பி. சத்யன் பெற்றுக் கொண்டார்.
முதல் அமைச்சர் பினராயி விஜயன் தனது அரசியல் வாழ்க்கையில் 7-வது முறை யாகவும், தர்மடம் தொகுதி யில் இருந்து 3-வது முறை யாகவும் சட்டசபை தேர்த லில் போட்டியிடுகி றார். முன்னதாக அவர் குத்து ரம்பா தொகுதியில் இருந்து 3 முறையும், பய்யனூர் தொகுதியில் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளார்.
காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் வி. பி. அப்துல் ரஷீத் வேட்பா ளராக நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க. சார்பில் கே. ரஞ்சித் போட்டியிடுகிறார்.